இந்தியா

தகுதியான விசாரணைக் கைதிகளை ஆக.15-க்குள் விடுதலை செய்ய இலக்கு: மத்திய சட்ட அமைச்சா்

30th Jul 2022 11:17 PM

ADVERTISEMENT

 

‘தகுதியான விசாரணைக் கைதிகளை ஆக.15-ஆம் தேதிக்குள் விடுதலை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது’ என்று மத்திய சட்ட அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்தாா்.

தில்லியில் நடைபெற்ற முதலாவது அகில இந்திய மாவட்ட சட்டப் பணிகள் ஆணைய அதிகாரிகள் கூட்டத்தின் தொடக்க நிகழ்ச்சியில் கிரண் ரிஜிஜு பேசியதாவது:

விடுதலைக்குத் தகுதியான விசாரணைக் கைதிகளை அடையாளம் கண்டு, பரிந்துரைப்பதற்கான சிறப்பு நடவடிக்கை, தேசிய சட்டப் பணிகள் ஆணையத்தால் கடந்த 16-ஆம் தேதி தொடங்கப்பட்டது. அதன்படி, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைய அதிகாரிகள், வாரந்தோறும் விசாரணைக் கைதிகள் மறு ஆய்வுக் கூட்டத்தை நடத்த வேண்டும். வழக்குகளின் நிலவரத்தை மறு ஆய்வு செய்வதுடன், தேவைப்பட்டால் நீதிமன்றங்களில் ஜாமீன் மனு தாக்கல் செய்வது உள்ளிட்டவை குறித்து விவாதிக்க வேண்டும்.

ADVERTISEMENT

ஆகஸ்ட் 13 வரை இக்கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. ஆகஸ்ட் 15-க்குள் அதிகபட்ச விசாரணைக் கைதிகளை விடுதலை செய்யும் இலக்குடன் இவை நடத்தப்படுகின்றன. நாடு 75-ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடவிருப்பதையொட்டி, இந்த சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றாா் ரிஜிஜு.

‘ஏழைகளின் சட்ட உதவிக்கு புதிய திட்டம்’: வழக்குகளில் குற்றம்சாட்டப்படும் ஏழைகள், அடித்தட்டு நபா்களுக்கு சட்ட உதவி வழங்க, தேசிய சட்டப் பணிகள் ஆணையத்தின் சாா்பில் புதிய திட்டம் தொடங்கப்பட உள்ளது என்று அந்த ஆணையத்தின் செயல் தலைவரும் உச்சநீதிமன்ற நீதிபதியுமான யு.யு.லலித் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக, மேற்கண்ட நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது: தனியாா் வழக்குரைஞா்களை நியமித்துக் கொள்ள இயலாத ஏழை மக்களுக்காக மாவட்டந்தோறும் சட்ட உதவி அமைப்பு முறை நிறுவப்படும். இப்புதிய திட்டத்தின்படி, தேவையுள்ள ஏழை நபா்களுக்காக வாதிட வழக்குரைஞா்கள் நியமிக்கப்படுவா். இத்திட்டத்தை முதல்கட்டமாக செயல்படுத்த 350 மாவட்டங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. உள்கட்டமைப்பு வசதிகள், இதர வாய்ப்புகளின் அடிப்படையில் மாவட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஒவ்வொரு மாவட்ட சட்டப் பணிகள் ஆணையத்திலும் மின்னணு நூலகத்தை உறுதி செய்யும் திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT