இந்தியா

யூடியூப்பில் விடியோ பார்த்து ஒயின் தயாரித்த சிறுவனுக்கு சிக்கல்

30th Jul 2022 01:24 PM

ADVERTISEMENT


திருவனந்தபுரம்: யூடியூப் பார்த்து வீட்டிலேயே திராட்சைப் பழங்களைக் கொண்டு ஒயின் தயாரித்த சிறுவனுக்கு மிகப்பெரிய பிரச்னை ஏற்பட்டுள்ளது.

வீட்டிலேயே ஒயின் தயாரித்து அதனை தனது நண்பர்களுக்குக் கொடுத்த 12 வயது சிறுவனின் நண்பன் ஒருவர், அதனைக் குடித்த சிறிது நேரத்தில் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிறகு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, சிறுவன் நலமடைந்தார்.

அரசுப் பள்ளியில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த இந்த சம்பவம் குறித்து, காவல்துறையினருக்குக் கிடைத்த தகவலை அடிப்படையாக வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதையும் படிக்க.. ஒரே குடும்பத்தில் 4 பிள்ளைகள் ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆன அதிசயம்

ADVERTISEMENT

சிறுவனிடம் நடத்திய விசாரணையில், அவன் தனது பெற்றோர் வாங்கி வந்த திராட்சைப் பழத்தைக் கொண்டு, வீட்டிலேயே ஒயின் தயாரித்ததை ஒப்புக் கொண்டான். ஆனால் ஆல்கஹால் போன்ற எதையும் பயன்படுத்தவில்லை என்றும் ஒயின் தயாரித்து, அதனை யூடியூப் விடியோவில் கூறியபடி, பள்ளம் தோண்டி பூமிக்குள் புதைத்ததாகவும் கூறியுள்ளார்.

அந்த ஒயின் மாதிரியை ஆய்வகச் சோதனைக்கு அனுப்பியிருக்கும் காவல்துறையினர், அதில் ஆல்கஹால் போன்றவை கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டால் சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும் என்று காவல்துறையினர் கூறுகிறார்கள்.

இதையும் படிக்க.. இதுவரை நல்ல விருந்தை ருசித்தார்.. இப்போது..: உத்தவ் கடும் தாக்கு

சிறுவன் செய்த செயலால், பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகம் சந்திக்க வேண்டிய சட்ட சிக்கல்கள் குறித்தும் அவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT