இந்தியா

குடியரசுத் தலைவருடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்திப்பு

30th Jul 2022 03:24 PM

ADVERTISEMENT

குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று சந்தித்தார். 

நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு கடந்த திங்கள்கிழமை பதவியேற்றார். இதையடுத்து அவரை பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

இதையும் படிக்க- பாகிஸ்தான்: மீண்டும் மின்கட்டணம் விலை உயர்வு 

அந்த வகையில் திரௌபதி முர்முவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று சந்தித்த நிலையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது பொதுவான தேச நிகழ்வுகள் குறித்து இரு தலைவா்களும் விவாதித்ததாக தெரிகிறது. 

ADVERTISEMENT

இது குறித்து ராஜ்நாத் சிங் தனது ட்விட்டர் பதிவில், "இன்று ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT