இந்தியா

நாட்டில் புதிதாக 20,408 பேருக்கு கரோனா; மேலும் 54 பேர் பலி

30th Jul 2022 09:45 AM

ADVERTISEMENT

சனிக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 20,408 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

நாடு முழுவதும் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,43,384 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.33 சதவீதமாக உள்ளது. 

தொற்று பாதித்தவர்களில் புதிதாக 54 பேர் இறந்துள்ளனர். இதனால் தொற்றுக்கு இறந்தோரின் எண்ணிக்கை 5,26,312 ஆக அதிகரித்துள்ளது. இறந்தோரின் விகிதம் 1.20 சதவீதமாக உள்ளது.

கரோனாவில் இருந்து 20,958 போ் குணமடைந்துள்ளனர். இதனால் இதுவரை குணமடைந்தவா்கள் எண்ணிக்கை 4,33,30,442-ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 98.48 சதவீதமாக உள்ளது. 

ADVERTISEMENT

நாடு முழுவதும் இதுவரை 2,03,94,33,480 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. வியாழக்கிழமை மட்டும் 33,87,173 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இதுகுறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. 

இதையும் படிக்க |  ரன்பீர் கபூர் படப்பிடிப்புத் தளத்தில் தீ விபத்து: ஒருவர் பலி

ADVERTISEMENT
ADVERTISEMENT