இந்தியா

தேசிய போதைப்பொருள் பாதுகாப்பு மாநாடு: அமித் ஷா பங்கேற்பு

30th Jul 2022 12:17 PM

ADVERTISEMENT

 

பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் போதைப் பொருள் தடுப்பு தொடர்பான தேசிய பாதுகாப்பு மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று பங்கேற்க உள்ளார். 

ஒருநாள் பயணமாக சண்டிகர் வந்துள்ள அமித்ஷாவை தவிர, தேசிய மாநாட்டில் பஞ்சாப் ஆளுநர், சண்டிகர் யூனியன் பிரதேச நிர்வாகி பன்வாரிலால் புரோஹித், பஞ்சாப், ஹரியாணா, இமாச்சலப் பிரதேச முதல்வர்கள், ஜம்மு-காஷ்மீரின் துணைநிலை ஆளுநர் மற்றும் மத்திய சமூக நீதி மற்றும் அதிகார அமைச்சர் ஆகியோர் பங்கேற்று உரையாற்ற உள்ளனர். 

இதையும் படிக்கலாம்: நல்ல செய்தி காத்திருக்கிறது இந்த ராசிக்கு: வாரப் பலன்கள்

ADVERTISEMENT

இந்த மாநாட்டில் தில்லி, சென்னை, குவஹாத்தி மற்றும் கொல்கத்தா ஆகிய நான்கு இடங்களில் உள்ள போதைப்பொருள் தடுப்புப் பிரிவு(என்சிபி) குழுக்கள் மூலம் 30 ஆயிரம் கிலோ எடைகொண்ட போதைப் பொருள்கள் ஒரே நேரத்தில் எரிக்கப்பட உள்ளனர். 

இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 75 கிலோ போதைப் பொருட்களை ஒழிப்பது என்று அதிகாரிகள் உறுதிமொழி எடுத்துள்ளனர். 

இதன்பின்னர், முதல்வர்கள், பஞ்சாப் ஆளுநர் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை அமித்ஷா சந்திக்கிறார். 

கடந்த நான்கு மாதங்களில் சண்டிகருக்கு ஷாவின் இரண்டாவது பயணம் இதுவாகும். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT