வங்கதேசத்தில் சிட்டகாங் மாவட்டத்தில் உள்ள ஆளில்லா லெவல் கிராசிங்கில் பயணம் செய்த மினி பேருந்து ரயிலின் மீது மோதியதில் 7 மாணவர்கள் உள்பட 11 பேர் உயிரிழந்தனர்.
மிர்ஷாராய் உபாசிலாவில் வெள்ளிக்கிழமையன்று, மாணவர்கள் மற்றும் பயிற்சி மையத்தின் ஆசிரியர்களை ஏற்றிச் சென்ற மினி பேருந்து டாக்கா நோக்கிச் செல்லும் ப்ரோவதி விரைவு ரயிலில் மோதியுள்ளது.
இந்த விபத்தில் இறந்த ஏழு மாணவர்களும் ஒரே வயதுடையவர்கள்.
நான்கு பேர் ஆசிரியர்கள் என்றும் மிர்ஷாராய் காவல் நிலையத்தின் பொறுப்பதிகாரி கபீர் ஹொசைன் தெரிவித்தார்.
இதையும் படிக்கலாம்| நல்ல செய்தி காத்திருக்கிறது இந்த ராசிக்கு: வாரப் பலன்கள்
ரயில் மினிபேருந்து மீது மோதியதில், ரயில் பாதையில் பல நூறு மீட்டர் கீழே இழுத்துச் சென்றது. மினி பேருந்தில் இருந்த 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மீதமுள்ள 5 பேர் படுகாயமடைந்தனர்.
இறந்தவர்களின் உடல்கள் சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டு, குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக சிட்டகாங் தீயணைப்புப் பிரிவு அலுவலகத்தின் துணை இயக்குநர் அனிசுர் ரஹ்மான் தெரிவித்தார்.
மேலும், காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிட்டகாங் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.