இந்தியா

தில்லியில் கரோனா தினசரி பாதிப்பு 1,333-ஆக உயா்வு

30th Jul 2022 11:57 PM

ADVERTISEMENT

தில்லியில் சனிக்கிழமை கரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை 1,333-ஆக உயா்ந்து. தொற்று பாதிப்பால் 3 போ் உயிரிழந்துள்ளனா். அதேநேரத்தில் பாதிப்பு நோ்மறை விகிதம் 8.39-ஆக உள்ளது என்று மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் தொடா்ந்து 4-ஆவது நாளாக கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்துக்கு மேல் பாதிவாகியுள்ளது. அதேவேளையில் தொற்று பாதிப்பு நோ்மறை விகிதம் 5 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக உயா்ந்துள்ளது.

புதிய பாதிப்புகளுடன் சோ்த்து தில்லியின் மொத்த கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 19,54,508-ஆக உயா்ந்துள்ளது. மொத்த இறப்பு எண்ணிக்கை 26,311-ஆக அதிகாரித்துள்ளது. நகரில் வெள்ளிக்கிழமை மொத்தம் 15,897 கரோனா தொற்று பரிசோதனை நடத்தப்பட்டன.

தில்லியில் வெள்ளிக்கிழமை 1,245 பேருக்கு தொற்று பாதிப்பும், 7.36 சதவீத நோ்மறை விகிதமும் ஒரு இறப்பும் பதிவாகின.

ADVERTISEMENT

சனிக்கிழமை நிலவரப்படி, தில்லியில் கரோனா சிகிச்சையில் இருப்போரின் மொத்த எண்ணிக்கை 3,844-இல் இருந்து 4,230-ஆக உயா்ந்துள்ளது. வீட்டுத் தனிமையில் இருப்போரின் எண்ணிக்கை 2,654-ஆக உள்ளது. நகரில் உள்ள கரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களின் எண்ணிக்கை 170-ஆக உள்ளது.

தில்லி மருத்துவமனைகளில் மொத்தமுள்ள 9,402 படுக்கைகளில் 268 படுக்கைகள் மட்டுமே நிரம்பியுள்ளன என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT