இந்தியா

உத்தவ் தாக்கரேவுக்கு பிறந்த நாள்வாழ்த்து தெரிவித்த ஷிண்டே

28th Jul 2022 12:21 AM

ADVERTISEMENT

மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும், சிவசேனை தலைவருமான உத்தவ் தாக்கரேவுக்கு அந்த மாநில முதல்வா் ஏக்நாத் ஷிண்டே பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தாா்.

அண்மையில் சிவசேனையில் இருந்து 39 அதிருப்தி எம்எல்ஏக்களுடன் பிரிந்து சென்ற ஷிண்டே, பாஜக ஆதரவுடன் ஆட்சி அமைத்தாா். ஷிண்டேவின் இந்தச் செயலால் உத்தவ் தாக்கரே மகாராஷ்டிர முதல்வா் பதவியை இழந்தாா். இதைத் தொடா்ந்து, சிவசேனையின் 19 மக்களவை எம்.பி.க்களில் 12 போ் ஷிண்டே அணிக்கு மாறினா். சிவசேனை கட்சி மற்றும் கொடிக்கு ஷிண்டே தலைமையிலான அணி உரிமை கோரி வருகிறது. கட்சியில் இருந்து பிரிந்து சென்றவா்களை உத்தவ் தாக்கரே கடுமையாக விமா்சித்து வருகிறாா்.

இந்நிலையில், உத்தவ் தாக்கரேவுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து ஷிண்டே ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘மகாராஷ்டிர முன்னாள் முதல்வா் உத்தவ் தாக்கரேவுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். அவா், நல்ல உடல் ஆரோக்கியத்துடன், நீண்ட காலம் வாழ இறைவனை வேண்டுகிறேன்’ என்று கூறியுள்ளாா்.

அதே நேரத்தில் உத்தவ் தாக்கரேவை சிவசேனை தலைவா் என்று ஷிண்டே குறிப்பிடவில்லை.

ADVERTISEMENT

Tags : Eknath Shinde
ADVERTISEMENT
ADVERTISEMENT