இந்தியா

ஜம்மு - ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் நிலச்சரிவு: போக்குவரத்து நிறுத்தம்

28th Jul 2022 01:38 PM

ADVERTISEMENT

ஜம்மு:  ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் வியாழக்கிழமை பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவால் ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

இடைவிடாத பெய்த மழையால் பந்தியல் மற்றும் மெஹாட் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையும் படிக்க: உலகளவில் 18,000 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு: உலக சுகாதார அமைப்பு

ADVERTISEMENT

ஜம்முவில் இருந்து புறப்பட்ட அமர்நாத் யாத்திரை பக்தர்கள் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டு சந்தர்கோட்டில் நிறுத்தப்பட்டுள்ளனர். ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் உள்ள கட்டுப்பாட்டு அறைகளில் இருந்து நெடுஞ்சாலைத் துறையினர் அறிவுறுத்தும் வரை பக்தர்கள் பயணத்தை மேற்கொள்ள வேண்டாம் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT