இந்தியா

பெண் பணக்காரர்கள் பட்டியல்: ரோஷினி நாடார் முதலிடம்

28th Jul 2022 12:25 PM

ADVERTISEMENT

 

இந்திய பெண் பணக்காரர்கள் பட்டியலில் ஹெச்சிஎல் நிறுவனத்தின் தலைவர் ரோஷினி நாடார் முதலிடம் பெற்றுள்ளார்.

கோட்டக் வங்கியும், ஹூருன் நிறுவனமும் இணைந்து 2021 ஆம் ஆண்டின் இந்தியாவின் 100 பணக்கார பெண்கள் பட்டியலை வெளியிட்டுள்ளன.

அதில் தொடர்ந்து 2-வது முறையாக ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைவர் ரோஷினி நாடார் மல்கோத்ரா முதலிடம் பெற்றுள்ளார். கணக்கெடுப்பின்படி ரோஷினியின் சொத்து மதிப்பு ரூ.84,330 கோடி ஆகும். 

ADVERTISEMENT

இதையும் படிக்க: உலகின் 4-வது பெரிய பணக்காரர் அதானி! பில்கேட்ஸைப் பின்தள்ளினார்

இரண்டாவது இடத்தில் நைகா அழகுசாதனப் பொருள்கள் நிறுவனத்தின் தலைவர் பல்குனி நாயர் உள்ளார். அவருடைய சொத்துமதிப்பு 2021 ஆண்டில் 963 சதவீதம் உயர்ந்து ரூ.57, 520 கோடியாக அதிகரித்துள்ளது.

பையோகான் நிறுவனத் தலைவர் கிரண் மசூம்தார் ஷா ரூ.29,030 கோடி சொத்து மதிப்புடன் 3-வது இடத்தில் உள்ளார். 4-வது இடத்தில் டிவிஸ் நிறுவனர் நீலிமா மோட்டோபார்டி(ரூ.28,180 கோடி), 5-வது இடத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஸோகோ நிறுவனத் தலைவர் ராதா வேம்பு(ரூ.26,260 கோடி) உள்ளனர்.

மேலும், ஜெட்செட்கோ நிறுவனர் கனிகா தெக்ரிவால்(33) ரூ.420 கோடி சொத்து மதிப்புடன் இந்தியாவின் மிக இளவயது பணக்காரப் பெண்ணாக இடம்பிடித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT