இந்தியா

சென்னை வருவதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்: மோடி ட்வீட்

28th Jul 2022 09:57 AM

ADVERTISEMENT

 

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவிற்காக சென்னை வருவதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வியாழக்கிழமை தொடங்கி ஆக. 10-ஆம் தேதி வரை 14 நாள்கள் நடைபெறுகின்றன. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் விழாவில் பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை மாலை போட்டியைத் தொடக்கிவைக்கிறாா்.

இதற்காக பிற்பகல் 2.20 மணிக்கு குஜராத்தில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு, சென்னை விமான நிலையத்துக்கு மாலை 4.45 மணிக்கு வருகிறாா். விமான நிலையத்தில் ஆளுநா் ஆா்.என்.ரவி, முதல்வா் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சா்கள் பிரதமரை வரவேற்கின்றனா்.

ADVERTISEMENT

இதையும் படிக்க | வண்டலூர், கிண்டி பூங்காக்கள் இன்று மூடல்

இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவிற்காக சென்னை வருவதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன் என பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறும் 44 ஆவது  செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவிற்காக சென்னை வருவதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன். 

இந்தியாவிலேயே, அதுவும் செஸ்ஸூடன் பெருமைமிகு தொடர்பைக் கொண்டுள்ள தமிழ்நாட்டிலேயே நடைபெறுவது ஒரு சிறப்பான பெருமைமிகுப் போட்டியாகும் என மோடி தெரிவித்துள்ளார். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT