இந்தியா

மாநிலங்களவையில் இருந்து மேலும் 3 எம்.பி.க்கள் இடைநீக்கம்

28th Jul 2022 12:21 PM

ADVERTISEMENT

மாநிலங்களவையில் இருந்து மேலும் 3 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்படுவதாக அவைத் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் விலை உயர்வு, ஜிஎஸ்டி வரி உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து தொடர் அமளியில் ஈடுபட்டு வரும் எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர்.

திமுகவின் 6 எம்.பி.க்கள் உள்பட எதிர்க்கட்சிகளை சேர்ந்த 20 எம்.பி.க்கள் மாநிலங்களவையில் இருந்தும், 4 எம்.பி.க்கள் மக்களவையிலிருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அமளியில் ஈடுபட்டதற்காக சுஷில்குமார் குப்தா, சந்தீப் குமார் பாட்டீல் மற்றும் அஜித் குமார் பொயான் ஆகியோரை இடைநீக்கம் செய்யப்படுவதாக இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதையும் படிக்க | 17 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்: தேர்தல் ஆணையம்

இதன்மூலம், நடப்பு கூட்டத்தொடரில் இடைநீக்கம் செய்யப்பட்ட மொத்த எம்.பி.க்களின் எண்ணிக்கை 27ஆக உயர்ந்துள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18ஆம் தேதி தொடங்கிய நிலையில் ஆகஸ்ட் 12 வரை நடைபெறவுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT