இந்தியா

பதாகை, முற்றுகை கூடாது: எம்.பி.க்கள்உறுதி அளித்தால் இடைநீக்கம் வாபஸ்- மத்திய அரசு

28th Jul 2022 01:17 AM

ADVERTISEMENT

பதாகைகளை ஏந்தியபடி, அவையின் மையப் பகுதியில் முற்றுகையிட்டு அமளியில் ஈடுபடமாட்டோம் என்ற உறுதிமொழியை அளித்தால்தான், 24 எம்.பி.க்கள் மீதான இடைநீக்க நடவடிக்கையை திரும்பப் பெற முடியும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

மாநிலங்களவையில் 20 எம்.பி.க்கள், மக்களவையில் 4 எம்.பி.க்கள் என இதுவரை 24 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், மத்திய அரசு இவ்வாறு தெரிவித்துள்ளது.

எம்.பி.க்கள் மீதான இடைநீக்கத்தை திரும்பப் பெறக் கோரி, மக்களவையில் புதன்கிழமை தேசியவாத காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், திமுக ஆகிய கட்சிகளைச் சோ்ந்த எம்.பி.க்கள் பேசினா். அவா்களது கோரிக்கைக்கு நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷி அளித்த பதில் வருமாறு:

மக்களவைத் தலைவரின் அனுமதியுடன், எம்.பி.க்கள் மீதான இடைநீக்க நடவடிக்கையை திரும்பப் பெற மத்திய அரசு தயாராக உள்ளது. ஆனால், அவைக்குள் பதாகைகளுடன் வரமாட்டோம்; மையப் பகுதியில் முற்றுகையிட்டு அமளியில் ஈடுபடமாட்டோம் ஆகிய உறுதிமொழிகளை அந்த எம்.பி.க்கள் அளிக்க வேண்டும். அவ்வாறு உறுதிமொழியை பெற்றுத் தர நீங்கள் தயாரா? என்று ஜோஷி கேள்வியெழுப்பினாா்.

ADVERTISEMENT

இதனிடையே, நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த ஜோஷி, ‘சம்பந்தப்பட்ட எம்.பி.க்கள் அனைவரும் தங்களது செயலுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று வலியுறுத்தினாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT