இந்தியா

எம்.பி.க்கள் இடைநீக்கம்: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் போராட்டம்

27th Jul 2022 11:11 AM

ADVERTISEMENT

எம்.பி.க்கள் இடைநீக்கத்தை திரும்பப் பெறக் கோரி நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாநிலங்களவையில் தொடர் அமளியில் ஈடுபட்டதற்காக திமுகவின் 6 எம்.பி.க்கள் உள்பட 19 பேரும், மக்களவையில் 4 காங்கிரஸ் எம்.பி.க்களும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலையின் முன்பு இடைநீக்கம் செய்யப்பட்ட உத்தரவை திரும்பப் பெறக் கோரி 23 எம்.பி.க்களும் இணைந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18ஆம் தேதி தொடங்கிய நிலையில், விலை உயர்வு, ஜிஎஸ்டி உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ADVERTISEMENT

எதிர்க்கட்சி எம்.பி.க்களின் அமளி காரணமாக கடந்த 7 நாள்களாக இரு அவைகளும் முடங்கியது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT