இந்தியா

எதிர்க்கட்சிகள் அமளி: மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

27th Jul 2022 02:28 PM

ADVERTISEMENT

மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாளை காலை 11 மணிவரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

விலை உயர்வு, ஜிஎஸ்டி வரி, பணவீக்கம் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சியினர் கடந்த 7 நாள்களாக அமளியில் ஈடுபட்டதால் அவைகள் முடங்கின.

இதற்கிடையே அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 20 பேரை மாநிலங்களவையில் இருந்து ஒரு வாரத்திற்கு இடைநீக்கம் செய்து அவையின் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் அறிவித்தை தொடர்ந்து எதிர்க்கட்சியினர் போராட்டத்தை வலுப்படுத்தியுள்ளனர்.

இதையும் படிக்க | எம்.பி.க்கள் இடைநீக்கம்: ‘ஜனநாயகப் படுகொலை’ என்ற முகக்கவசம் அணிந்து எதிர்ப்பு

இந்நிலையில், இன்று காலைமுதல் எம்.பி.க்கள் இடைநீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மாநிலங்களவையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதால் நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.

ADVERTISEMENT

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18ஆம் தேதி தொடங்கிய நிலையில், ஆகஸ்ட் 12 வரை நடைபெறவுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT