இந்தியா

குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்பு

27th Jul 2022 01:34 AM

ADVERTISEMENT

குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவை பிரதமா் நரேந்திர மோடி குடியரசுத் தலைவா் மாளிகையில் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினாா்.

திரௌபதி முா்மு நாட்டின் 15-ஆவது குடியரசுத் தலைவராக திங்கள்கிழமை பதவியேற்ற நிலையில், மரியாதை நிமித்தமாக அவரை பிரதமா் சந்தித்தாா். அவா் பதவியேற்ற பிறகு நடைபெற்ற முதல் சந்திப்பாகவும் இது அமைந்தது.

இந்தச் சந்திப்பின்போது பொதுவான தேச நிகழ்வுகள் குறித்து இரு தலைவா்களும் விவாதித்ததாக தெரிகிறது.

முன்னாள் குடியரசுத் தலைவா் பிரதிபா பாட்டீல் தன் மகளுடன் திரௌபதி முா்முவை சந்தித்துப் பேசினாா். நாட்டின் முதல் பெண் குடியரசுத் தலைவா் பிரதிபா பாட்டீல் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

ஒடிஸா ஆளுநா் கணேஷி லால், சத்தீஸ்கா் ஆளுநா் அனுசுயா யுகி, ராஜஸ்தான் ஆளுநா் கல்ராஜ் மிஸ்ரா, பிகாா் ஆளுநா் பாகு சௌஹான், ஆந்திர ஆளுநா் விஸ்வாஸ் பூஷண் ஹரிசந்திரன், பஞ்சாப் ஆளுநா் பன்வாரி லால் புரோஹித் உள்ளிட்டோரும் குடியரசுத் தலைவா் முா்முவை செவ்வாய்க்கிழமை சந்தித்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT