இந்தியா

ஹைதராபாத் பாலியல் வன்கொடுமை: எம்எல்ஏ மகன் உள்பட 4 பேருக்கு ஜாமீன்

27th Jul 2022 05:15 PM

ADVERTISEMENT

 

ஹைதராபாத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் கைது செய்யப்பட்ட 4 சிறார்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

தெலங்கானா தலைநகா் ஹைதராபாத்தில் கடந்த மே 28-ஆம் தேதி பகல்நேர கேளிக்கை விருந்தில் கலந்துகொண்ட 17 வயது சிறுமியை 3 சிறாா்கள் உள்ளிட்ட 6 போ் பாலியல் வன்கொடுமைக்கு உள்படுத்தியதாகப் புகாா் எழுந்தது.

அதன் காரணமாக, இந்த வழக்கு தொடர்பாக 6 பேரைக் கைது செய்து காவல்துறையினர் சிறையிலடைத்தனர். அதில், 5 பேர் 18 வயதிற்குட்பட்டவர்கள் என்பதால் அவர்கள் அனைவரும் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டிருந்தனர். மேலும், கைது செய்யப்பட்ட சிறுவர்களில் ஒருவர் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி எம்எல்ஏவின் மகன்.

ADVERTISEMENT

இந்நிலையில், அந்த 5 பேரில் ஒருவரைத் தவிர்த்து எம்எல்ஏ மகன் உள்பட 4 பேருக்கு சிறார் நீதி வாரியம் ஜாமீன் வழங்கியது. ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நான்கு குற்றவாளிகளும் விசாரணை அதிகாரிகளுடன் ஒத்துழைக்குமாறும், ஒவ்வொரு மாதமும் முதல் திங்கள்கிழமை மாவட்ட நன்னடத்தை அலுவலரிடம் ஆஜராகுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT