இந்தியா

மாநிலங்களவையில் இருந்து ஆம் ஆத்மி எம்.பி. இடைநீக்கம்

27th Jul 2022 12:19 PM

ADVERTISEMENT

மாநிலங்களவையில் இருந்து ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த சஞ்சய் சிங் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

மாநிலங்களவையின் நேற்றைய கூட்டத்தின் போது காகிதங்களை கிழித்து அவைத் தலைவரின் இருக்கை முன்பு எறிந்த காரணத்திற்காக இந்த வாரம் முழுவதும் கூட்டத்தில் பங்கேற்க சஞ்சய் சிங்கிற்கு தடை விதித்து அவைத் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக, அமளியில் ஈடுபட்டதற்காக மாநிலங்களவையில் இருந்து 6 திமுக எம்.பி.க்கள் உள்பட எதிர்க்கட்சிகளை சேர்ந்த 19 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இதையும் படிக்க | கனியாமூர் பள்ளி தாளாளர் உள்பட 5 பேர் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18ஆம் தேதி தொடங்கிய நிலையில், விலை உயர்வு, ஜிஎஸ்டி வரி உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT