இந்தியா

கர்நாடகத்தில் புதிய வேலைவாய்ப்பு கொள்கை விரைவில் அறிமுகப்படுத்தப்படும்: முதல்வர் பொம்மை

17th Jul 2022 03:14 PM

ADVERTISEMENT

 

கர்நாடகத்தில் புதிய வேலைவாய்ப்பு கொள்கை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என கர்நாடக முதல்வர் பொம்மை தெரிவித்துள்ளார். 

மாநில, மாவட்ட அளவிலான வணிக மற்றும் தொழிலக கூட்டமைப்பு மாநாட்டில்  கர்நாடக முதலவர் பசவராஜ் பொம்மை பேசியதாவது: 

கர்நாடக மாநிலத்தில் அமைதியான புரட்சி நடைபெறுகிறது. அடுக்கு-2 நகரங்களில் உயர் தொழில்நுட்பத் தொழில்கள் அமைப்பதை அரசாங்கம் ஊக்குவித்து வருகிறது. தொழில் தொடங்குவதை எளிதாக்குவதற்கு தொழில்துறை சங்கங்கள் அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும். கர்நாடக வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு பெருநிறுவன சமூகப் பொறுப்பை ஏற்க வேண்டும். 

ADVERTISEMENT

ஜிஎஸ்டி வரி விதிப்புகள் குறித்தும் விவாதிக்கப்படும். கலபுர்கி மற்றும் விஜயபுராவில் மெகா டெக்ஸ்டைல் பூங்காக்கள் வரவுள்ளன.  யாதகிரியில் மருந்து மையம் அமைக்கப்படுகிறது. மேலும் மும்பை-பெங்களூரு தொழில்துறை தாழ்வாரத்தில் துமகுரு, சித்ரதுர்கா, ஹாவேரி, தார்வாட் மற்றும் பெலகாவி ஆகியவை மிகப்பெரிய தொழில்மயமாக்கலாக மாறும். 

நாட்டின் ஒட்டுமொத்த புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் 43 சதவிகிதம் கர்நாடக மாநிலம் மட்டுமே உற்பத்தி செய்து வருகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT