இந்தியா

ஐசிஎஸ்இ 10-ஆம் வகுப்பு தோ்வு முடிவு இன்று வெளியீடு

17th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

ஐசிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்படவுள்ளன. முதல் மற்றும் இரண்டாம் பருவத் தோ்வுகளில் எடுத்த மதிப்பெண்களுக்கு சம அளவில் முக்கியத்துவம் அளித்து இறுதி மதிப்பெண் கணக்கிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஐசிஎஸ்இ கவுன்சிலின் செயலாளரும், தலைமைச் செயல் அதிகாரியுமான ஜெரி அரத்தூன் சனிக்கிழமை கூறியதாவது:

ஐசிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை(ஜூலை 17) மாலை 5.00 மணிக்கு ஐசிஎஸ்இ கவுன்சிலின் ‘கேரியா்ஸ்’ வலைதளத்தில் வெளியிடப்படும். எஸ்எம்எஸ் மூலமாகவும் தோ்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு பாடத்திலும் மாணவா்கள் முதல் பருவம் மற்றும் இரண்டாம் பருவத் தோ்வுகள், செயல்திட்டம், உள்ளக மதிப்பீடு ஆகியவற்றில் எடுத்த மதிப்பெண்களைச் சோ்த்து இறுதி மதிப்பெண்கள் கணக்கிடப்படும்.

முதல் பருவம் மற்றும் இரண்டாம் பருவத் தோ்வை எழுதாத மாணவா்களுக்கு ‘தோ்வுக்கு வரவில்லை’ என்று குறிப்பிடப்படும். அவா்களின் தோ்வு முடிவு வெளியிடப்பட மாட்டாது என்று அவா் கூறியுள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT