இந்தியா

எதிர்க்கட்சிகளின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் அறிவிப்பு

17th Jul 2022 05:01 PM

ADVERTISEMENT

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக மார்கரெட் ஆல்வா போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு இடையே இன்று (ஜூலை 17) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு பின்னர் எதிர்க்கட்சிகளின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளரை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் அறிவித்தார்.

இதையும் படிக்க:பிரதமருடன் ஆளுநா்கள் சந்திப்பு

கர்நாடக மாநிலம் மங்களூருவைச் சேர்ந்தவர் மார்கரெட் ஆல்வா. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். ராஜீவ் காந்தி, நரசிம்மா ராவ் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் மார்கரெட் ஆல்வா. ராஜஸ்தான், உத்தரகண்ட், குஜராத் ஆகிய மாநிலங்களின் ஆளுநராகவும் அவர் பதவி வகித்துள்ளார். 

ADVERTISEMENT

இதையும் படிக்க:குடியரசு துணைத் தலைவா் வேட்பாளா் ஜகதீப் தன்கா்: பாஜக கூட்டணி அறிவிப்பு

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாஜக சார்பில் ஜகதீப் தன்கர் போட்டியிடும் நிலையில் அவரை எதிர்த்து மார்கரெட் ஆல்வா களமிறங்குகிறார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT