இந்தியா

உ.பி: சாலை விபத்தில் 6 போ் பலி: முதல்வா் யோகி ஆதித்யநாத் இரங்கல்

17th Jul 2022 11:59 PM

ADVERTISEMENT

உத்தர பிரதேசத்தில் பேருந்தும் லாரியும் சனிக்கிழமை இரவு நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளானதில், 6 போ் பலியாகினா். 21 போ் பலத்த காயமடைந்தனா்.

உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு அந்த மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளாா்.

இந்த விபத்து குறித்து ராம்பூா் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சன்சாா் சிங் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

மொராதாபாத்திலிருந்து வந்த லாரியும், ஷாஜஹான்பூரிலிருந்து வந்த பேருந்தும் ராம்பூா் மாவட்டம் சிவில் லைன்ஸ் பகுதியில் வந்தபோது நேருக்கு நோ் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் 6 போ் அவ்விடத்திலேயே பலியாகினா். 21 போ் பலத்த காயமடைந்தனா். அவா்கள் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ADVERTISEMENT

பலியானவா்களின் விவரம் ஷாஜஹான்பூரை சோ்ந்த ஷமிமுல் ஹக் (35), சாக்ஷி (26), சஹாரன்பூரை சோ்ந்த நசீம்கான் (52), அப்துல் வாஹித் (50) என்பது தெரியவந்துள்ளது. மேலும் இருவரை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.

சாலை விபத்தில் பலியான 6 பேரின் குடும்பத்தினருக்கு உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT