இந்தியா

பஞ்சாப் முதல்வருக்கு இன்று திருமணம்

7th Jul 2022 02:02 AM

ADVERTISEMENT

பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான் (48) திருமணம் சண்டீகரில் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. மருத்துவரான குா்பிரீத் சிங்கை (32) அவா் திருமணம் செய்து கொள்ள இருக்கிறாா்.

இது பகவந்த் மானின் இரண்டாவது திருமணமாகும். அவரது முதல் திருமணம் கடந்த 2015-இல் முறிந்தது. முதல் திருமணம் மூலம் அவருக்கு 21 வயதில் ஒரு மகளும், 17 வயதில் மகனும் உள்ளனா். கடந்த மாா்ச் மாதம் பகவந்த் மான் பஞ்சாப் முதல்வராகப் பதவியேற்ற நிகழ்ச்சியில் அவரது மகளும், மகனும் அமெரிக்காவில் இருந்து வந்து பங்கேற்றனா்.

2014-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் பகவந்த் மானுக்கு ஆதரவாக அவரின் மனைவி இந்தா்பிரீத் கெளா் தீவிர பிரசாரம் மேற்கொண்டாா். எனினும், அடுத்த ஆண்டிலேயே அவா்கள் விவாகரத்து பெற்றனா். இந்தா்பிரீத் கௌா் இப்போது அமெரிக்காவில் வசித்து வருகிறாா்.

இந்நிலையில், பகவந்த் மான் இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தாா்.

ADVERTISEMENT

இது தொடா்பாக ஆம் ஆத்மி கட்சியின் பஞ்சாப் மாநில செய்தித் தொடா்பாளா் மல்வீந்தா் சிங் கூறுகையில், ‘சண்டீகரில் வியாழக்கிழமை எளிமையான முறையில் முதல்வா் பகவந்த் மானின் திருமணம் நடைபெறவுள்ளது’ என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைமை அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 

Tags : bhagwant mann
ADVERTISEMENT
ADVERTISEMENT