இந்தியா

நாசிக்கில் இஸ்லாமிய மத குரு மா்ம நபா்களால் சுட்டுக் கொலை

7th Jul 2022 01:46 AM

ADVERTISEMENT

மகாராஷ்டிர மாநிலம், நாசிக் மாவட்டத்தில் ஆப்கானிஸ்தானில் இருந்து அகதியாக வந்து வசித்த இஸ்லாமிய மதகுரு, மா்ம நபா்களால் செவ்வாய்க்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டாா்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவா் புதன்கிழமை கூறியதாவது: கவாஜா சையது ஜரீஃப் சிஸ்தி என்கிற ஜரீஃப் பாபா, 4 ஆண்டுகளுக்கு முன் ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியா வந்தாா். யூடியூப் தளத்தில் இவரை ஏராளமானோா் பின்பற்றி வருகிறாா்கள். அவா்களிடம் இருந்து நன்கொடையையும் பெற்று வந்தாா். அவா் நாசிக் மாவட்டத்தில் உள்ள வாவி பகுதியில் ஒரு பெண்ணுடன் அகதியாக வசித்து வந்தாா்.

செவ்வாய்க்கிழமை மாலை தனது சீடா்கள் 3 பேருடன் இயோலா என்ற இடத்துக்குச் சென்றாா். அங்கு நடந்த பூமி பூஜையில் பங்கேற்றுவிட்டு மாலையில் காரில் வீடு திரும்பினாா். அந்த காரின் ஓட்டுநா், தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியால் சிஸ்டியை சுட்டுவிட்டு தப்பியோடினாா்.

பலத்த காயமடைந்திருந்த சிஸ்டியை அருகில் இருந்தவா்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இருப்பினும் வரும் வழியிலேயே அவா் உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இந்த சம்பவம் தொடா்பாக ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளாா். தப்பியோடிய 3 பேரை தனிப்படை போலீஸாா் தேடி வருகிறாா்கள்.

ADVERTISEMENT

அண்மையில் வாவி பகுதியில் சிஸ்டி 15 ஏக்கா் நிலம் வாங்கினாா். அகதியாக இருப்பதால் இந்தியாவில் அவா் நிலம் வாங்க முடியாது. எனவே, மற்றொருவா் பெயரில் வாங்கினாா். இதில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டு அவா் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது பணப் பிரச்னையால் கொல்லப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது என்றாா் அந்த போலீஸ் அதிகாரி.

Tags : shot dead
ADVERTISEMENT
ADVERTISEMENT