இந்தியா

மும்பை: 2500 கிலோவுக்கும் அதிகமாக மாட்டிறைச்சி பறிமுதல், 10 பேர் கைது

DIN

மும்பை புறநகர் பகுதியில் 2500 கிலோவுக்கும் அதிகமாக மாட்டிறைச்சி பறிமுதல் செய்யப்பட்டதுடன், 10 பேர் காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மும்பை புறநகர் பகுதியான தியோநாரில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. 

விலங்குகள் பாதுகாப்பு அமைப்பு அளித்த தகவலின் பேரில் மும்பை காவல் துறையினர் காலை நேரத்தில் கத்கோபார்-மான்ஹர்டு இணைப்புச் சாலையில் காத்திருந்தனர். அப்போது மாட்டிறைச்சி ஒரு வாகனத்தில் இருந்து மற்றொரு வாகனத்திற்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து, காவல் துறையினர் அவர்களிடமிருந்து மாட்டிறைச்சியினை பறிமுதல் செய்தனர். மேலும், அவர்களையும் கைது செய்தனர்.

இது குறித்து காவல் துறை தரப்பில் கூறியதாவது: “ நாங்கள் மூன்று வாகனங்களில் இருந்த மாட்டிறைச்சியினைப் பறிமுதல் செய்துள்ளோம். மாட்டிறைச்சியை வாகனங்களில் மாற்றிய 10 பேர் கைது செய்ய்ப்பட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட மாட்டிறைச்சியின் மாதிரி சோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விலங்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இந்த செயலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.” எனத் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் விரிவாக்க விவகாரம்: தோ்தலை புறக்கணிக்க கிராம மக்கள் ஆலோசனை

தி‌ல்லி​யி‌ல் கோ‌ட்டையைப் பிடி‌க்க போ‌ட்டா போ‌ட்டி!

சதுரகிரிக்கு செல்ல 4 நாள்களுக்கு அனுமதி

சென்னகேசவ பெருமாள் கோயிலில் ஸ்ரீ ராம நவமி திருவிழா

தமிழகத்தில் இன்று வாக்குப் பதிவு - காலை 7 மணிக்கு தொடக்கம்; கடைசி நிமிஷங்களில் வருவோருக்கு டோக்கன்

SCROLL FOR NEXT