இந்தியா

குஜராத்தை போல் லக்னௌவிலும் வருகிறது 108 அடி உயர அனுமன் சிலை 

7th Jul 2022 12:23 PM

ADVERTISEMENT

 

குஜராத்தை போல் லக்னௌவிலும் 108 அடி உயர அனுமன் சிலை புதிதாக நிறுவப்பட உள்ளது. 

கோமதி நதிக்கரையில் உள்ள தேவ்ரஹா காட் பகுதியில் உள்ள 400 ஆண்டுகள் பழமையான அனுமன் கோயிலில் இந்த சிலை நிறுவப்படுகிறது. 

ஜூலேலால் பூங்காவில் 151 அடி உயர லக்ஷ்மணன் சிலைக்குப் பிறகு நகரின் இரண்டாவது உயரமான சிலை இதுவாகும். இது சின்னமான ரூமி கேட்டை விடக் கிட்டத்தட்ட இரண்டு மடங்கு உயரமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. 

ADVERTISEMENT

இந்த சிலையை சின்ஹா ​​சகோதரர்கள் வடிவமைத்துள்ளனர். அனுமன் கோயிலில் 2.5 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த சிலை அமைக்கப்பட உள்ளது 

கோமதி பாபா என்று அழைக்கப்படும் அனுமன் கோயிலின் தலைவரான மஹந்த் ராம் சேவக் தாஸ் கூறுகையில், 

ஹரித்வாரில் கங்கைக் கரையில் உள்ள சிவன் சிலையைப் போல, அனுமன் சிலை அமர்ந்திருக்கும் நிலையில் இருக்கும் என்றார்.

இரண்டு ஆண்டுகளில் சிலை தயாராகிவிடும் என்று கட்டடக் கலைஞர்களில் ஒருவரும், கோயிலின் அறங்காவலருமான விஜய் சின்ஹா ​​கூறினார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT