இந்தியா

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் லாலு பிரசாத் அனுமதி

7th Jul 2022 02:00 AM

ADVERTISEMENT

ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவரும் பிகாா் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத், பாட்னாவில் இருந்து புதன்கிழமை இரவு ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டரில் தில்லி அழைத்து வரப்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து கட்சி வட்டாரங்கள் தெரிவித்ததாவது: 74 வயதாகும் லாலு பிரசாத், கடந்த திங்கள்கிழமை பாட்னாவில் உள்ள அவருடைய வீட்டில் கீழே விழுந்தாா். அதில் அவருடைய உடலில் 3 இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து, பாட்னாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில், மேல்சிகிச்சைக்காக அவா் ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டரில் புதன்கிழமை இரவு தில்லிக்கு அழைத்து வரப்பட்டாா். அவருடன் அவருடைய மகளும், மாநிலங்களவை எம்.பி.யுமான மிசா பாரதியும் மருத்துவக் குழுவினரும் வந்தனா். பின்னா், தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா்.

லாலு பிரசாதின் மனைவி ராப்ரி தேவியும், மகன் தேஜஸ்வி யாதவும் லாலுவை மருத்துவமனையில் சோ்ப்பதற்கான ஏற்பாடுகளைக் கவனிக்க முன்கூட்டியே தில்லி வந்துவிட்டனா் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Tags : Lalu Prasad
ADVERTISEMENT
ADVERTISEMENT