இந்தியா

சீக்கிய முறைப்படி குர்பிரீத் கவுரை மணம் புரிந்த பகவந்த் மான்

7th Jul 2022 04:36 PM

ADVERTISEMENT

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் சீக்கிய முறைப்படி டாக்டர் குர்பிரீத் கவுரை இன்று (ஜூலை 7) மணம் புரிந்தார்.

இந்த திருமணத்தில் பங்கேற்க குறைந்த அளவிலேயே அழைப்பிதழ்கள் கொடுக்கப்பட்டன. இந்த திருமண நிகழ்வில் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ராகவ் சாதா கலந்து கொண்டனர். முதல்வர் பகவந்த மானின் இந்தத் திருமணம் குறித்து குறைந்த அளவிலேயே தகவல்கள் வெளியாகின. இந்தத் திருமணம் தொடர்பான ஒரு புகைப்படம் ஒன்றை ராகவ் சாதா பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில் முதல்வர் பகவந்த் மான் தங்க நிற ஆடையில் உள்ளார். அவர் பகிர்ந்துள்ள மற்றொரு புகைப்படத்தில் அவர் மற்றும் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், பகவந்த மானை திருமணம் நடைபெறும் முதல்வரின் சண்டிகர் இல்லத்திற்கு அழைத்துச் செல்கின்றனர். அதேபோல மற்றொரு புகைப்படத்தில் பகவந்த் மான் மற்றும் டாக்டர் குரிப்ரீத் கவுர் கைகோர்த்தபடி நிற்கின்றனர். அவர்களின் பின்னணியில் திருமணத்தில் பங்கேற்றோர் நிற்பது போன்ற புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளது.

இந்தத் திருமண நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு இந்தியா மற்றும் இத்தாலிய முறையிலான உணவு விருந்து அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

 

ADVERTISEMENT

முன்னாள் மனைவி விவாகரத்து: 

6 ஆண்டுகளுக்கு முன்பு பகவந்த் மான் தனது முதல் மனைவி இந்தர்பிரீத் கவுரை விவாகரத்து செய்தார். இந்தர்ப்ரீத் மற்றும் அவரது குழந்தைகள் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். கடந்த மார்ச் 16ஆம் தேதி முதல்வர் பகவந்த் மான் உடைய மகள் சீரத் கவுர் மான் (21 வயது) மற்றும் மகன் தில்சான் மன் (17 வயது) தனது தந்தையின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள அமெரிக்காவிலிருந்து இருந்து இந்தியா வந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT