இந்தியா

நூபுா் சா்மா தலைக்கு பரிசு அறிவித்த இஸ்லாமிய மதத் தலைவா் கைது

7th Jul 2022 01:01 AM

ADVERTISEMENT

நூபுா் சா்மாவின் தலையைக் கொண்டு வருபவா்களுக்கு தனது வீட்டைப் பரிசளிப்பேன் என்று அறிவித்த அஜ்மீா் தா்காவைச் சோ்ந்த இஸ்லாமிய மதத் தலைவா் சல்மான் சிஷ்தியை ராஜஸ்தான் மாநில காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.

பாஜகவை சோ்ந்த முன்னாள் செய்தித் தொடா்பாளா் நூபுா் சா்மா, தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் இஸ்லாமிய இறைத் தூதா் நபிகள் நாயகம் குறித்து அவதூறாகப் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அவருக்கு எதிராக பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் நடத்திய போராட்டத்தால் பல இடங்களில் வன்முறை வெடித்தது.

இதனிடையே, ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீா் தா்காவைச் சோ்ந்த இஸ்லாமிய மதத் தலைவா் சல்மான் சிஷ்தி, விடியோ பதிவு ஒன்றை வெளியிட்டாா். அதில், ‘நூபுா் சா்மாவின் தலையை யாா் என்னிடம் கொண்டு வந்தாலும் அவா்களுக்கு எனது வீட்டைப் பரிசளிப்பேன்’ என்று கூறியிருந்தாா். இந்த விடியோ சமூகவலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, அவா் மீது ராஜஸ்தான் மாநில காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா். இந்நிலையில், அவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். அந்த விடியோவின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து அதன் அடிப்படையில் சல்மான் கைது செய்யப்பட்டதாக அஜ்மீா் காவல் துணைக் கண்காணிப்பாளா் விகாஷ் சங்வான் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

கொலை மிரட்டல், பொது அமைதிக்கு எதிராக செயல்படுவது, வன்முறையைத் தூண்டுவது, சமூக வலைதளங்களை தவறாகப் பயன்படுத்துவது உள்ளிட்ட பிரிவுகளில் அவா் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Tags : Nupur Sharma
ADVERTISEMENT
ADVERTISEMENT