இந்தியா

சாலைக்கு நடுவே குட்டி ஈன்ற யானை: மனிதாபிமானம் காத்த மனிதர்கள்

7th Jul 2022 01:02 PM

ADVERTISEMENT

தமிழ்நாடு - கேரள மாநிலங்களை இணைக்கும் முக்கிய சாலையில் இடுக்கி மாவட்டம் மரையூர் அருகே, சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக வாகனங்கள் அணிவகுத்து நின்றன. ஒரு வாகனத்திலிருந்தும் எந்த ஹாரன் சப்தமும் எழவில்லை. காரணம், சாலையின் நடுவே குட்டி ஈன்ற யானை மற்றும் யானைக் குட்டிக்காக.

கருவுற்றிருந்த யானை ஒன்று, பிரசவ வலி ஏற்பட்டதும், பிளிறலுடன் மரையூர் சாலைப் பகுதியை வந்தடைந்தது. பிளிறிக் கொண்டே வந்த யானையைக் கண்டதும் வாகனங்கள் தொலைவிலேயே நிறுத்தப்பட்டன. 

இதையும் படிக்க.. திருச்செந்தூர் கோயில்: நாழிக்கிணற்றில் நீராட, வள்ளி குகை தரிசன கட்டணம் நாளை முதல் ரத்து

எந்த வாகனமும் யானையை தொல்லைக் கொடுக்காமல், சப்தம் எழுப்பாமல் அமைதி காத்தன. கடுமையான வலியால் பிளிறிக் கொண்டிருந்த யானை குட்டியை ஈன்றதும்தான் அந்த சப்தம் குறைந்தது. பிறகு, பிறந்த குட்டி யானையை, அதன் தாய் வாஞ்சையோடு தடவிக் கொடுத்து எழுந்து நிற்க வைத்து, காட்டுக்குள் செல்ல ஆயத்தமாகின.

ADVERTISEMENT

இவ்வளவும் சுமார் ஒரு மணி நேரத்தில் நடந்தன. ஆனால், எந்த வாகனமும் அவசரம் காட்டாமல், யானைக்கு வழிவிட்டு காத்திருந்தன. யானை தனது குட்டியுடன் காட்டுக்குள் திரும்பிய பிறகுதான் வாகனங்கள் தத்தமது வழிகளில் பயணமாயின. இது தொடர்பான விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT