இந்தியா

என்கவுன்டர்: பெற்றோர் கேட்டுக்கொண்டதால் சரணடைந்த பயங்கரவாதிகள்

DIN

ஜம்மு-காஷ்மீரில் காவல் துறையினர் என்கவுன்டரின்போது பெற்றோர்கள் வேண்டி கேட்டுக்கொண்டதன் பேரில் இரண்டு பயங்கரவாதிகள் காவல் துறையிடம் சரணடைந்தனர். 

ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் இன்று (ஜூலை 6) அதிகாலை காவல் துறையினர் என்கவுன்டரில் ஈடுபட்டனர். குல்காம் மாவட்டத்தின் ஹதிகாம் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக வந்த தகவலைத் தொடர்ந்து இன்று அதிகாலை களமிறங்கிய காவல் துறையினர், பயங்கரவாதிகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

பயங்கரவாதிகளும் காவல் துறையினரை நோக்கி பதில் தாக்குதல் நடத்தினர். இதனிடையே பயங்கரவாதிகளின் பெற்றோர்கள் மூலம் காவல் துறையினர் பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். 

காவல் துறையின் ஒலிப்பெருக்கி மூலம் பேசிய பெற்றோர்கள் தங்கள் மகன்களை சரணடையுமாறு வேண்டி கேட்டுக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து இரண்டு பயங்கரவாதிகள் காவல் துறையிடம் சரணடைந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்க்கு ரூ.12 லட்சம் அபராதம்!

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

அதிமுக, தேமுதிக கூட்டணிக்கு நல்ல தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள்: பிரேமலதா நம்பிக்கை

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

SCROLL FOR NEXT