இந்தியா

அரசியலமைப்பு குறித்து சர்ச்சை கருத்து: கேரள அமைச்சர் ராஜிநாமா

DIN

அரசியலமைப்பு சட்டம் குறித்து சர்ச்சைகுரிய வகையில் கருத்து தெரிவித்த நிலையில் கேரள அமைச்சர் சஜி செரியான் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

பத்தனம்திட்டா மாவட்டம் முல்லப்பள்ளியில் அண்மையில் நடைபெற்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாநில அமைச்சா் சஜி செரியான் பங்கேற்று அரசியலமைப்புச் சட்டம் குறித்துப் பேசினாா். அவரது பேச்சுகள் அடங்கிய விடியோ தொலைக்காட்சி செய்தி சேனல்களிலும் சமூக வலைதளங்களிலும் பரவிய நிலையில் அவர் தெரிவித்த கருத்து அரசியலமைப்புக்கு எதிராக இருப்பதாக விமர்சனம் தெரிவித்த எதிர்க்கட்சிகள் அவர் உடனடியாக பதவி விலக வலியுறுத்தினர். 

தொடக்கத்தில் இந்த விவகாரம் தொடர்பாக பதவி விலக முடியாது என அமைச்சர் சஜி செரியான் தெரிவித்திருந்த நிலையில் தனது பேச்சு தவறாக அா்த்தம் கொள்ளப்பட்டிருந்தால், அதற்காக வருந்துவதாகவும் அவா் தெரிவித்தார்.

இந்நிலையில் அமைச்சர் சஜி செரியான் தனது பதவியை ராஜிநாமா செய்வதாக புதன்கிழமை அறிவித்தார். இது தொடர்பாக பேசிய அவர், “தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுவதாகவும், இதற்கும் தான் பேசிய நிகழ்விற்கும் தொடர்பு இல்லை எனவும் தெரிவித்தார். 

அரசியலமைப்பு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த விவகாரத்தில் அமைச்சர் பதவி விலகி இருப்பது அம்மாநில அரசியலில் அனலைக் கிளப்பியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரத்னம் மேக்கிங் விடியோ!

'வாக்களிக்கப் போகிறீர்களா?' : பெங்களூரு உணவகங்கள் அறிவித்திருக்கும் சலுகைகள்!

ரன்களை வாரி வழங்கிய டாப் 5 பந்துவீச்சாளர்கள்; முதலிடத்தில் மோஹித் சர்மா!

மெட்ரோ பணி: சென்னையில் 2 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்!

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT