இந்தியா

பிரபல வாஸ்து ஜோதிடர் கத்தியால் குத்திக் கொலை!

DIN

கர்நாடகத்தில் பிரபல வாஸ்து ஜோதிடர் சந்திரசேகர் குருஜி, மர்ம நபர்களால் செவ்வாய்க்கிழமை பிற்பகல் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். 

பல்வேறு மாநிலங்களில் அவர் ரியல் எஸ்டேட் பணியிலும் ஈடுபட்டு வந்துள்ளார். 

கர்நாடக மாநிலம் பாகல்கோட் பகுதியைச் சேர்ந்த பிரபல வாஸ்து ஜோதிடர் சந்திரசேகர் குருஜி, ஹூப்ளி பகுதியிலுள்ள உன்கல் ஏரி அருகேவுள்ள விடுதியில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். அவரிடம் ஆசி பெறுவதைப்போன்று காத்திருந்த இருவர், வயிற்றுப் பகுதியிலும், கழுத்திலும் பலமுறை குத்தி கொலை செய்துள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் மிகவும் பிரபலமானவர் ஜோதிடர் சந்திரசேகர் குருஜி. அவர் கன்னட தொலைக்காட்சியில் வாஸ்து தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்றதன் மூலம் பலரால் அறியப்பட்டவர். மேலும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நிலத்தை வாங்கி விற்பனை செய்து வரும் ரியல் எஸ்டேட் பணியையும் அவர் செய்துவந்துள்ளார். 

இந்நிலையில், சந்திரசேகர் குருஜியிடம் ஆசி பெறுவதைப்போன்று சென்ற மர்ம நபர்கள் அவரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். இதனை நேரில் கண்ட சாட்சி இவ்வாறு தெரிவித்துள்ளார்.  

குருஜியை சரமாறியாக குத்திய மர்ம நபர்கள் தப்பித்துச்சென்றதும், அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் விடுதியில் இருந்த ஊழியர்கள் மற்றும் பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

விஜயா நகர் காவல் துறையினர் தெரிவித்த தகவலின்படி, குருஜி கடந்த மூன்று நாள்களாகவே விடுதியில் தங்கிவந்துள்ளார். புதன்கிழமை விடுதியை அவர் காலி செய்வதாக விடுதி குறிப்பில் உள்ளது. மும்பையிலிருந்து திரும்பிய குருஜி ஜூலை 2ஆம் தேதி முதல் விடுதியில் தங்கியுள்ளார். 

குருஜி கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, விடுதி முழுவதும் சீல் வைத்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குருஜி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இதனைக் கொண்டு காவல் துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

தமிழகத்துக்கும் இந்த பரிதாப நிலை ஏற்படுமா? அச்சத்தில் மக்கள்!

புறநானூறு தாமதமாகும்: சூர்யா

நாங்க ரெடி... நீங்க ரெடியா?

அவசர காலத்தில் விமானங்களை நெடுஞ்சாலைகளில் தரையிறக்கும் வசதி!

ரயிலில் எலி, அதிர்ச்சியான பயணி: ரயில்வே துறையின் பதில்?

SCROLL FOR NEXT