இந்தியா

ம.பி.யில் உரிமம் இல்லாத ஆயுதங்கள், மதுபானங்கள் பறிமுதல்

5th Jul 2022 04:18 PM

ADVERTISEMENT

 

மத்தியப் பிரதேசத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு 1,300 உரிமம் இல்லாத ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக 1.73 லட்சத்துக்கும் அதிகமானோர் மீது தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

மாநிலத்தில் 16 நகர் பாலிகா நிகாம்கள், 99 நகர் பாலிகா பரிஷத்கள் மற்றும் 298 நகர் பரிஷத்கள் உள்பட 413 நகராட்சிகளுக்கு 2 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் ஜூலை 6 மற்றும் ஜூலை 13 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. 

இந்த நிலையில், நிர்வாகம் உரிமம் இல்லாத 1,349 ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளது. மேலும், 2.58 லட்சம் பேர் உரிமம் பெற்ற ஆயுதம் வைத்திருப்பவர்கள், அருகிலுள்ள காவல் நிலையங்களில் டெபாசிட் செய்துள்ளதாகவும் அதிகாரி ஒருவர் கூறினார். 

ADVERTISEMENT

இதுதவிர, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீர் 1,73,714 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், 20,984 ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்டுகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன என்று அந்த அதிகாரி கூறினார். 

தார் மாவட்டத்தில் மட்டும் 13,096 லிட்டர்கள் உள்பட 5.82 கோடி மதிப்புள்ள 51,366 லிட்டர் மதுபானங்களை நிர்வாகம் கைப்பற்றியுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT