இந்தியா

அபாய கட்டத்தைத் தாண்டிய குண்டலிகா நதி: விழிப்புடன் இருக்க முதல்வர் வேண்டுகோள்

DIN

மகாராஷ்டிரத்தில் அடுத்த நான்கு நாள்களுக்கு கனமழை பெய்யும் என்று அம்மாநில வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

மேலும் இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறுகையில், 

அதிகரித்து வரும் மழை மற்றும் வெள்ளம் போன்ற சூழ்நிலையை கருத்தில் கொண்டு, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, தலைமை செயலாளர் மனு குமார் ஸ்ரீவஸ்தவாவுடன் ஆலோசனை நடத்தினார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், உயிர்ச் சேதம், பொருள் சேதம் ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்யவும் மாநில நிர்வாக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 

மும்பை அருகே அமைந்துள்ள ராய்காட் மாவட்டத்தில் உள்ள குண்டலிகா நதி அபாய கட்டத்தைத் தாண்டியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவிக்கிறது. மும்பை மற்றும் அதன் அண்டை மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை காலை கனமழை மற்றும் வெள்ளம் ஏற்பட்டது. 

தெற்கு கொங்கன், கோவாவிற்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கையும், வடக்கு கொங்கன், வட மத்திய மகாராஷ்டிரா மற்றும் மராத்வாடா பகுதிகளுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கையும் விடுத்துள்ளது. 

மராத்வாடா பகுதியில் மின்னலுடன் கனமழையும், 40-50 கிமீ வேகத்தில் பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய மழையும் பெய்யக்கூடும். 

முதல்வர் ஷிண்டே, தாணே, ராய்காட், பால்கர், ரத்னகிரி மற்றும் சிந்துதுர்க் மாவட்ட ஆட்சியர்களுடன் தொடர்பில் இருப்பதாக முதல்வர் அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தேசிய பேரிடர் மீட்புப் படையும் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மும்பையின் நிலைமையும் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றது. 

அம்பா, சாவித்திரி, பாதல்கங்கா, உல்லாஸ் மற்றும் காதி ஆகிய ஆறுகளின் நீர்மட்டம் அபாய அளவை விடச் சற்று குறைவாகவே உள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆலங்குளம் அருகே விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு

கடையநல்லூரில் துணை ராணுவப் படை அணிவகுப்பு

ஊதிய உயா்வு ஒப்பந்த அமல் கோரி விசைத்தறியாளா்கள் வேலைநிறுத்தம்

ஆலங்குளம் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி

கிராமப்புற கண்டுபிடிப்புகளை மேம்படுத்த புரிந்துணா்வு ஒப்பந்தம்

SCROLL FOR NEXT