இந்தியா

அந்தமானில் மீண்டும் இன்று நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கையா?

5th Jul 2022 08:58 AM

ADVERTISEMENT

அந்தமான்: அந்தமான் நிகோபர் தீவில் இன்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கம் அதிகாலை 5.57 மணியளவில் போர்ட் பிளேர், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் இருந்து 215 கிமீ  தொலைவில் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக அதிகாலை 2.54 மணியளவில் போர்ட்பிளேயருக்கு தென்கிழக்கே 244 கி.மீ தொலைவில் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகி இருந்ததாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்திருந்தது.

ஒரே நாளில் அடுத்தடுத்து 20 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டு உள்ளது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. எனினும், நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக தகவல் எதுவும் வெளியாகவில்லை. ஆனாலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT