இந்தியா

'காளி' போஸ்டர்: காங்கிரஸின் நிலைப்பாடு என்ன?

5th Jul 2022 06:47 PM

ADVERTISEMENT

 

மத உணர்வுகளை புண்படுத்துவதை அனுமதிக்காதீர்கள் என 'காளி' போஸ்டருக்கு காங்கிரஸ் கருத்துத் தெரிவித்துள்ளது.  

கனடா நாட்டில் உள்ள டொரோண்டோவில் ஆகா கான் அருங்காட்சியகத்தில் பன்முக கலாச்சாரத்தைக் கொண்டாடும் வகையில் ரிதம்ஸ் ஆஃப் கனடா என்ற திருவிழா நடைபெற்து. இதன் ஒரு பகுதியாக சுயாதீன பட இயக்குநர் லீனா மணிமேகலை காளி என்ற ஆவணப்படம் திரையிடப்பட்டது. 

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. போஸ்டரில் காளி வேடத்தில் இருக்கும் லீனா, கையில் சிகரெட்டுடன் இருக்கிறார். இதனையடுத்து இந்துக்கடவுள்களை அவர் இழிவுபடுத்திவிட்டதாக சர்ச்சை எழுந்தது. அரஸ்ட் லீனா மணிமேகலை என்ற ஹேஷ்டேக் சமூக வலைங்களில் டிரெண்டானது.

ADVERTISEMENT

இதைக்குறித்து காங்கிரஸின் ஊடகத் தொடர்பாளர் கௌரவ் வல்லப் கூறியதாவது:

நாங்கள் எல்லா மத உணர்வுகளையும் மதிக்கிறோம். மத உணர்வுகளை புண்படுத்தும் எதையும் அனுமதிக்காதீர்கள். இது பிஜேபிக்கும் பொருந்தும். அரசாங்கம் ஜிஎஸ்டி குறித்தோ மற்ற விசயங்கள் குறித்தோ பதிலளிக்காது.     
  

ADVERTISEMENT
ADVERTISEMENT