இந்தியா

தில்லியில் ஜூன் மாதத்தில் 32 பேருக்கு டெங்கு: மொத்த பாதிப்பு 143 ஆனது

5th Jul 2022 02:51 PM

ADVERTISEMENT

 

தலைநகர் தில்லியில் ஜூன் மாதத்தில் 32 பேருக்கு டெங்கு நோய்ப் பாதிப்பு பதிவாகியுள்ளன. இதையடுத்து இந்தாண்டு மொத்த பாதிப்பு 143 ஆக உயர்ந்துள்ளது என்று தில்லி மாநகராட்சி தெரிவித்துள்ளது. 

மாநகராட்சி இதுதொடா்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது:

ஜனவரியில் 23, பிப்ரவரியில் 16, மார்ச்சில் 22, ஏப்ரலில் 20 மற்றும் மே மாதத்தில் 30 டெங்கு பாதிப்பு பதிவாகியுள்ளன. 

ADVERTISEMENT

ஜூன் 2020, 2019, 2018 மற்றும் 2017 இல், நகரத்தில் 20, 26, 33 மற்றும் 60 பேருக்கு பாதிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த ஆண்டு 9,613 டெங்கு பாதிப்புகள் தேசிய தலைநகரில் பதிவாகியுள்ளன.

2016-2021, 2020 வரையிலான காலகட்டத்தில் 1,072 பேருக்கு நோய்த்தொற்றுகளுடன் குறைந்த எண்ணிக்கையில் பதிவானது. 

தில்லியில் 2016ல் 4,431 பேருக்கும், 2017ல் 4,726 பேருக்கும் பதிவாகியுள்ளன. அதே நேரத்தில் இந்த எண்ணிக்கை 2018இல் 2,798 ஆகவும், 2019இல் 2,036 ஆகவும் குறைந்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT