இந்தியா

நாட்டில் குறைந்த கரோனா பாதிப்பு!

DIN

புதுதில்லி: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 13,086 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பை விட குறைவாகும்.

நேற்று 16,135 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், இன்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. 

இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாட்டில் கடந்த ஒரு நாளில் மட்டும்  13,086 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,35,18,564 ஆக அதிகரித்துள்ளது.

தொற்றில் இருந்து ஒரே நாளில் 12,456 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,28,91,933 ஆக உயர்ந்துள்ளது.  இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.53% ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில்19 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5,25,242 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 1.21 சதவிகிதமாக உள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு 1,14,475  பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். கடந்த 24 மணிநேரத்தில்  11,44,805 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தால் ஊழல்வாதிகள் சுத்தமாகின்றனர்: கார்கே

ஜெய்ஸ்வாலுக்கு முன்னாள் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் புகழாரம்!

பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகர் - புகைப்படங்கள்

1 கோடி பார்வைகளைக் கடந்த இனிமேல்!

சென்னையில் பிரபல கேளிக்கை விடுதிக்கு வெடிகுண்டு மிரட்டல்: தொடரும் புரளி?

SCROLL FOR NEXT