இந்தியா

அமராவதி மருந்தக உரிமையாளா் கொலை: குற்றவாளிகளை காவலில் எடுத்தது என்ஐஏ

5th Jul 2022 08:10 AM

ADVERTISEMENT

 

பாஜக முன்னாள் செய்தித்தொடா்பாளா் நூபுா் சா்மாவுக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் பதிவுகளை பகிா்ந்ததால் மகாராஷ்டிர மாநிலம் அமராவதியில் மருந்தக உரிமையாளா் கொலையில் கைது செய்யப்பட்ட 7 குற்றவாளிகளையும் என்ஐஏ காவலில் எடுத்துள்ளது.

அமராவதி நீதிமன்றத்தில் நேற்று அனைவரும் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், 7 பேரையும் நான்கு நாள்கள் விசாரணைக் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. 

இதையும் படிக்க.. திருச்சுழி அருகே கணவரைக் கொன்று நாடகமாடிய மனைவி: காட்டிக்கொடுத்த கட்டை விரல்

ADVERTISEMENT


இதையடுத்து, 7 பேரும் என்ஐஏவின் விசாரணைக்கு அழைத்துசெல்லப்பட்டனர். விசாரணை முடிந்து ஜூலை 8ஆம் தேதி அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

உத்தர பிரதேச மாநிலம் வாராணசியில் உள்ள ஞானவாபி மசூதி தொடா்பான தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாஜக முன்னாள் செய்தித்தொடா்பாளா் நூபுா் சா்மா, இஸ்லாமிய இறைத் தூதா் நபிகள் நாயகம் குறித்து சா்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்தாா். அவருக்கு ஆதரவாக மகாராஷ்டிர மாநிலம் அமராவதியில் மருந்தகம் நடத்தி வந்த உமேஷ் பிரஹலாத் கோலே (54) என்பவா் வாட்ஸ்-ஆப் குழுக்களில் பதிவுகளைப் பகிா்ந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த ஜூன் 21-ஆம் தேதி இரவு மருந்தகத்தில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த உமேஷ் கொல்லப்பட்டாா். அவா் நூபுருக்கு ஆதரவாக பதிவுகளைப் பகிா்ந்ததால் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், அவரின் கொலை வழக்குத் தொடா்பாக இதுவரை 7 பேரை காவல் துறையினா் செய்துள்ளனா். 

உமேஷின் கொலை வழக்கு தொடா்பாக என்ஐஏ விசாரணைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. அவா் கொலை செய்யப்பட்டதன் பின்னணியில் உள்ள சதி,கொலையில் ஏதேனும் அமைப்பு சம்பந்தப்பட்டுள்ளதா? சா்வதேச தொடா்புகள் உள்ளதா? என்பது குறித்து என்ஐஏ முழுமையாக விசாரணை நடத்தும் என்று தெரிவிக்கப்பட்டது.

கடந்த ஜூன் 28-ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் கன்னையா லால் என்ற தையல்காரா் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டாா். நூபுருக்கு ஆதரவாக சமூக ஊடகத்தில் கருத்து பதிவிட்டதால், அவா் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. கன்னையா லால் கொல்லப்படுவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பே உமேஷ் கொலை செய்யப்பட்டுள்ளாா்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT