இந்தியா

ஒரே நாளில் 2வது முறை ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் கோளாறு

5th Jul 2022 07:40 PM

ADVERTISEMENT

 

ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்துக்கு சொந்தமான மற்றொரு விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால் விமானம் பாதியிலேயே தரையிறக்கப்பட்டது. 

குஜராத் மாநிலம் கண்ட்லாவில் இருந்து மும்பை சென்ற ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் விமானி அறை ஜன்னல் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. 

துணை விமானியின் ஜன்னல் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டதால் அவசரமாக மும்பை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

ADVERTISEMENT

படிக்க பிரபல வாஸ்து ஜோதிடர் கத்தியால் குத்திக் கொலை!

ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை சேர்ந்த எஸ்ஜி-11 விமானம் தில்லியிலிருந்து துபை நோக்கி 150 பயணிகளுடன் இன்று காலை புறப்பட்டுச் சென்ற நிலையில், இடது எரிபொருள் டேங்கில் கோளாறு ஏற்பட்டதால் பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT