இந்தியா

அக்னிபத் திட்டத்தில் 20% பெண்கள்: இந்திய கடற்படை

5th Jul 2022 02:41 PM

ADVERTISEMENT

அக்னிபத் திட்டத்தின் கீழ் கடற்படையில் 20 சதவிகிதம் பெண்கள் சேர்க்கப்படுவார்கள் என்று இந்திய கடற்படை திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

முப்படைகளிலும் வீரர்களை தேர்வு செய்வதற்கு அக்னிபத் என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் முப்படைகளில் இணைய விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.

இதையும் படிக்க | 5-வது டெஸ்டில் இனவெறி ரீதியாக இழிவுபடுத்தப்பட்ட இந்திய ரசிகர்கள்

இந்நிலையில், அக்னிபத் திட்டத்தின் கீழ் முதல் தொகுப்பில் 20 சதவிகிதம் பெண்கள் கடற்படையில் சேர்க்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும், பணிக்கு தேர்வாகும் பெண்கள் நாடு முழுவதும் உள்ள பல்வேறு கடற்படை தளங்களுக்கு பயிற்சிக்கு அனுப்பப்படுவார்கள் என்று கூறியுள்ளனர்.

Tags : Agnipath Navy
ADVERTISEMENT
ADVERTISEMENT