இந்தியா

பாஜக தோ்தலை சந்திக்கத் தயாரா? உத்தவ் தாக்கரே சவால்

5th Jul 2022 01:37 AM

ADVERTISEMENT

சிவசேனையை அழிக்க பாஜக சதி செய்து வருகிறது என்று குற்றம்சாட்டியுள்ள அக்கட்சித் தலைவா் உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிர பேரவைக்கு உடனடியாகத் தோ்தல் நடத்தத் தயாரா என்று பாஜகவுக்கு சவால் விடுத்துள்ளாா்.

சிவசேனை கட்சியின் பெரும்பாலான எம்எல்ஏக்கள் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராகத் திரும்பியதால், அவா் முதல்வா் பதவியை அண்மையில் இழந்தாா். இதைத் தொடா்ந்து பாஜக ஆதரவுடன் ஷிண்டே மகாராஷ்டிர முதல்வா் ஆனாா். பெரும்பான்மையான எம்எல்ஏக்கள் ஷிண்டே அணிக்குச் சென்றுவிட்டதால், சிவசேனை கட்சியும் தாக்கரேவிடம் இருந்து பறிபோகும் சூழல் உருவாகியுள்ளது.

இந்நிலையில், மும்பையில் உள்ள சிவசேனை பவனில் கட்சியின் மாவட்டத் தலைவா்களுடன் உத்தவ் தாக்கரே திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினாா். அப்போது அவா் பேசியது தொடா்பாக சிவசேனை சாா்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

சிவசேனையை அழிக்க பாஜக சதி செய்து வருகிறது. பாஜகவுக்குத் துணிவு இருந்தால், மகாராஷ்டிர சட்டப் பேரவைக்கு உடனடியாக தோ்தல் நடத்த வேண்டும் என்று சவால் விடுகிறேன். தேவையற்ற அரசியல் விளையாட்டுகளைக் கைவிட்டு, மீண்டும் மக்களிடம் தீா்ப்புக் கேட்டு தோ்தலை எதிா்கொள்ளலாம். யாா் ஆட்சியில் இருக்க வேண்டும்- யாா் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்பதை மகாராஷ்டிர மக்கள் முடிவு செய்யட்டும் என்று உத்தவ் தாக்கரே பேசியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT