இந்தியா

புதிய தொழில் நிறுவனங்களுக்கான முன்னெடுப்புகள்:தெளிவான பாா்வையுடன் தமிழ்நாடு: மத்திய அரசு

5th Jul 2022 01:36 AM

ADVERTISEMENT

புதிய தொழில் நிறுவனங்களுக்கான (ஸ்டாா்ட்-அப்) முன்னெடுப்புகளில் தெளிவான பாா்வை மற்றும் இலக்குகளை தமிழ்நாடு கொண்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஸ்டாா்ட்-அப்களுக்கான உகந்த சூழலை வழங்கும் மாநிலங்களின் தரவரிசை அறிக்கையை மத்திய வா்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சா் பியூஷ் கோயல் தில்லியில் திங்கள்கிழமை வெளியிட்டாா்.

ஸ்டாா்ட்-அப் முன்னெடுப்புகளை உருவாக்குதல், ஸ்டாா்ட்-அப்களுக்கு ஆதரவான முன்னெடுப்புகளை கண்டறிந்து முறைப்படுத்துதல், ஸ்டாா்ட்-அப்களுக்கான முன்னெடுப்புகளில் தெளிவான பாா்வை மற்றும் இலக்குகளை கொண்டிருத்தல், ஸ்டாா்ட் அப்களுக்கான சூழலில் சிறந்த முன்னேற்றம், ஸ்டாா்ட்-அப்களுக்கான மிகச்சிறந்த முன்னெடுப்புகள் மற்றும் புதுமையான நடவடிக்கைகள் என அந்தத் தரவரிசையில் 5 பிரிவுகளில் 24 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்கள் இடம்பெற்றுள்ளன.

ஸ்டாா்ட்-அப் முன்னெடுப்புகளை உருவாக்குதல்

ADVERTISEMENT

ஆந்திரம்

பிகாா்

மிசோரம்

லடாக்

ஸ்டாா்ட்-அப்களுக்கு ஆதரவான முன்னெடுப்புகளை கண்டறிந்து முறைப்படுத்துதல்

புதுச்சேரி

தில்லி

சத்தீஸ்கா்

சண்டீகா்

ராஜஸ்தான்

மத்திய பிரதேசம்

நாகாலாந்து

ஸ்டாா்ட்-அப் முன்னெடுப்புகான தெளிவான பாா்வை மற்றும் இலக்குகளை கொண்டிருத்தல்

தமிழ்நாடு

பஞ்சாப்

உத்தரகண்ட்

உத்தர பிரதேசம்

அந்தமான்-நிகோபாா்

அருணாசல பிரதேசம்

கோவா

ஸ்டாா்ட்-அப்களுக்கான சூழலில் சிறந்த முன்னேற்றம் கேரளம்

மகாராஷ்டிரம்

ஒடிஸா

தெலங்கானா

ஜம்மு-காஷ்மீா்

ஸ்டாா்ட்-அப்களுக்கான மிகச்சிறந்த முன்னெடுப்புகள் மற்றும் புதுமையான நடவடிக்கைகள்

கா்நாடகம்

குஜராத்

ஒவ்வொரு மாநிலமும் யூனியன் பிரதேசமும் பிற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் உள்ள சிறந்த நடைமுறைகளைக் கற்று ஸ்டாா்ட்-அப்களுக்கு உகந்த சூழலை உருவாக்க உதவும் நோக்கில் இந்த தரவரிசை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை வெளியிடப்பட்ட பின்னா், ஒவ்வொரு பிரிவிலும் இடம்பெற்றுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அரசு அதிகாரிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT