இந்தியா

விடுதலைப் போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜுவின் 30 அடி வெண்கலச் சிலை: பிரதமர் திறந்து வைத்தார்

4th Jul 2022 08:15 PM

ADVERTISEMENT

பீமாவரத்தில் விடுதலைப் போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜுவின் 30 அடி வெண்கலச் சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.

ஆந்திரப் பிரதேசத்தின் பீமாவரத்தில் விடுதலைப் போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜுவின் ஓராண்டுகால 125-வது பிறந்தநாள் கொண்டாட்டங்களை பிரதமர் தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் அம்மாநில முதல்வர் ஒய் எஸ் ஜெகன்மோகன் ரெட்டி, மத்திய அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அல்லூரி சீதாராம ராஜுவின் 30 அடி உயர வெண்கல சிலையையும் பிரதமர் திறந்துவைத்தார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, அல்லூரி சீதாராம ராஜுவின் 125-வது ஆண்டுவிழாவும், ராம்ப்பா கிளர்ச்சியின் நூற்றாண்டு விழாவும் ஆண்டு முழுவதும் கொண்டாடப்படும். அல்லூரி சீதாராம ராஜு இந்திய கலாச்சாரத்தின், பழங்குடி மக்களின், வீரத்தின், சிந்தனையின், மாண்புகளின் அடையாளமாக இருக்கிறார். 

இதையும் படிக்க- மேம்படுத்தப்பட்ட இலகு ரக ஹெலிகாப்டர் இந்திய கடற்படையில் இணைப்பு

இன்றைய நிகழ்ச்சி நமது விடுதலைப் போராட்ட வீரர்களின் சாகச செயல்கள் குறித்து அனைவரும் அறிந்துகொள்ள உறுதியேற்பதை பிரதிபலிக்கிறது. விடுதலைப் போராட்டம் என்பது ஒரு சில ஆண்டுகளின், சில பகுதிகளின் அல்லது ஒரு சிலரின் வரலாறு மட்டுமல்ல. நமது பன்முகத்தன்மையின் பலம், கலாச்சாரம், ஒரு தேசம் என்ற முறையில் நமது ஒற்றுமை ஆகியவற்றின் அடையாளமாக நமது விடுதலை இயக்க வரலாறு உள்ளது. நமது புதிய இந்தியா, விடுதலைப் போராட்ட வீரர்கள் கண்ட கனவுகளின் இந்தியாவாக இருக்க வேண்டும். ஏழை விவசாயிகள், தொழிலாளர்கள், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர் அனைவருக்கும் சமமான வாய்ப்புகளைக் கொண்டிருக்கும் ஓர் இந்தியா. 

ADVERTISEMENT

கடந்த எட்டு ஆண்டுகளில் நாட்டின் பழங்குடி சமூகத்தினரின் நலனுக்கு அரசு ஓய்வின்றி பாடுபட்டிருக்கிறது. திறன் இந்தியா இயக்கத்தின் மூலம் பழங்குடியினரின் கலையும், திறன்களும் புதிய அடையாளத்தை பெற்று வருகின்றன. உள்ளூர் பொருட்களுக்கு ஆதரவு அளிப்போம்’ என்பது பழங்குடியினரின் கலைத் திறன்களை வருவாய்க்கான வழியாக மாற்றியிருக்கிறது. புதிய இந்தியாவில் இன்று புதிய வாய்ப்புகள், துறைகள், சிந்தனை நடைமுறைகள், சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. இந்த சாத்தியக்கூறுகளை மெய்ப்பிக்கும் பொறுப்பை நமது இளைஞர்கள் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆந்திரப்பிரதேசம் என்பது நாயகர்களின், தேசபக்தர்களின் பூமியாகும் என்றார். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT