இந்தியா

நம்பிக்கை வாக்கெடுப்பில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு வெற்றி

ANI

மகாராஷ்டிரத்தில் முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு மீது இன்று பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ஷிண்டே வெற்றி பெற்றார்.

சட்டப்பேரவைத் தலைவராக புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட பாஜகவை சோ்ந்த ராகுல் நாா்வேகா் தலைமையில் இன்று 11 மணியளவில் நம்பிக்கை வாக்கெடுப்புத் தொடங்கியது.

மகாராஷ்டிர சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க, 145 வாக்குகள் தேவைப்படும் நிலையில், 164  வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளது. இதுவரை உத்தவ் தாக்கரேவின் அணியில் இருந்து வந்த சந்தோஷ் பங்கார், ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்தார்.

ஒவ்வொரு எம்எல்ஏக்களையும் நிற்க வைத்து, சட்டப்பேரவை அதிகாரிகள் வாக்குகளை பதிவு செய்துகொண்டனர். இதையடுத்து, மகாராஷ்டிர சட்டப்பேரவையில், ஏக்நாத் ஷிண்டே அரசு பெரும்பான்மைக்குத் தேவையான வாக்குகளைப் பெற்று, வெற்றி பெற்றுள்ளது.

முன்னதாக,

முதல்வா் ஷிண்டே தலைமையிலான அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று காலை நடைபெற்றது. சட்டப்பேரவைத் தலைவா் பதவியைக் கைப்பற்றிவிட்டதால், நம்பிக்கை வாக்கெடுப்பிலும் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்றே எதிா்பாா்க்கப்பட்டது. அதுபோலவே, 145 வாக்குகள் தேவைப்பட்ட நிலையில் 164 வாக்குகளடன் நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு வெற்றி பெற்றுள்ளது.

நம்பிக்கை வாக்கெடுப்புக்குப் பிறகு தனது அமைச்சரவையை அமைப்பதற்கான பணியில் முதல்வா் ஷிண்டே கவனம் செலுத்துவாா் என அரசியல் நோக்கா்கள் தெரிவிக்கின்றனா்.

முன்னதாக, ஏக்நாத் ஷிண்டேவுடன் கோவாவில் தங்கியிருந்த சிவசேனை அதிருப்தி எம்எல்ஏ-க்கள் சனிக்கிழமை மாலை மும்பை வந்தனா். அங்கு மாநில சட்டப்பேரவைக்கு அருகே இருந்த சொகுசு விடுதியில் அவா்கள் தங்கவைக்கப்பட்டனா். அவா்கள் ஞாயிற்றுக்கிழமை பேரவைக்கு வந்தபோது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

சட்டப்பேரவையில் இருந்த சிவசேனை கட்சி அலுவலகத்தையும் முதல்வா் ஷிண்டே தரப்பினா் பூட்டிவைத்தனா். இதற்கு முன்னாள் அமைச்சரான ஆதித்ய தாக்கரே கண்டனம் தெரிவித்தாா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT