இந்தியா

பிரதமர் மோடியுடன் சுயபடம் எடுத்துக்கொண்ட நடிகை ரோஜா (விடியோ)

4th Jul 2022 08:38 PM

ADVERTISEMENT

ஆந்திரத்தில் நிகழ்சியில் பங்கேற்க வந்த பிரதமர் மோடியுடன் அம்மாநில அமைச்சரும், பிரபல நடிகையுமான ரோஜா சுயபடம் எடுத்துக்கொண்டார்.

ஆந்திரப் பிரதேசத்தின் பீமாவரத்தில் விடுதலைப் போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜுவின் ஓராண்டுகால 125-வது பிறந்தநாள் கொண்டாட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் அம்மாநில முதல்வர் ஒய் எஸ் ஜெகன்மோகன் ரெட்டி, மத்திய அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

 

 

தொடர்ந்து அல்லூரி சீதாராம ராஜுவின் 30 அடி உயர வெண்கல சிலையையும் பிரதமர் திறந்துவைத்தார். நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பிரதமர் மோடியுடன் ஆந்திர மாநில அமைச்சரும், பிரபல நடிகையுமான ரோஜா சுயபடம் எடுத்துக்கொண்டார். தற்போது இந்த விடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.பிரதமரைத் தொடர்ந்து தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியுடனும் ரோஜா சுயபடம் எடுத்துக்கொண்டார்.

முன்னதாக பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT