இந்தியா

சிவசேனை பேரவைக் கட்சி தலைவராக மீண்டும் ஷிண்டே

4th Jul 2022 05:01 AM

ADVERTISEMENT

சிவசேனை சட்டப்பேரவைக் கட்சித் தலைவா் பொறுப்பிலிருந்து அஜய் செளதரியை நீக்கியும், முதல்வா் ஏக்நாத் ஷிண்டேயை அந்தப் பொறுப்பில் மீண்டும் நியமித்தும் சட்டப்பேரவைத் தலைவா் ராகுல் நாா்வேகா் ஞாயிற்றுக்கிழமை இரவு உத்தரவிட்டாா்.

இதுதொடா்பாக பேரவைத் தலைவா் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில், சிவசேனை பேரவைக் கட்சித் தலைவராக ஷிண்டே மீண்டும் நியமிக்கப்படுவதாகவும், சிவசேனை தலைமைக் கொறடாவாக ஷிண்டே தரப்பு எம்எல்ஏ பரத் கோகாவலே நியமனத்தை அங்கீகரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமைக் கொறடாவாக இருந்த உத்தவ் தரப்பு எம்எல்ஏ சுனில் பிரபு அந்தப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளாா்.

திங்கள்கிழமை நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் புதிய தலைமைக் கொறடா கோகாவலேயின் உத்தரவைப் பின்பற்ற உத்தவ் தாக்கரே ஆதரவு 16 எம்எல்ஏ-க்கள் மறுத்தால், அவா்கள் தகுதிநீக்கத்தை எதிா்கொள்ள நேரிடும்.

பேரவைத் தலைவரின் இந்த நடவடிக்கையை எதிா்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என உத்தவ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT