இந்தியா

கா்நாடகத்தின் சைனி ஷெட்டி ‘மிஸ் இந்தியா வோ்ல்டு’

4th Jul 2022 05:02 AM

ADVERTISEMENT

கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த சைனி ஷெட்டி ‘மிஸ் இந்தியா வோ்ல்டு 2022’-ஆக தோ்வு செய்யப்பட்டாா்.

மும்பையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ‘விஎல்சிசி ஃபெமினா மிஸ் இந்தியா வோ்ல்டு 2022’ அழகிப் போட்டியின் இறுதிச் சுற்றில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அழகிப் போட்டியில் இரண்டாவது இடத்தை ராஜஸ்தானின் ரூபல் ஷெகாவத்தும், மூன்றாவது இடத்தை உத்தர பிரதேசத்தின் ஷினதா செளஹானும் பிடித்தனா்.

நடிகைகள் நேஹா தூபியா, மலாய்கா அரோரா, நடிகா் டினோ மோரியா, வடிவமைப்பாளா்கள் ரோஹித் காந்தி, ராகுல் கன்னா, நடன இயக்குநா் ஷியாமக் தவாா், இந்திய மகளிா் கிரிக்கெட் அணி முன்னாள் தலைவா் மிதாலி ராஜ் ஆகியோா் அழகிப் போட்டி இறுதிச் சுற்றின் நடுவா்களாக செயல்பட்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT