இந்தியா

‘கரோனாவுக்கு ஆயுஷ் சிகிச்சை முறை தொகுப்பு: நீதி ஆயோக் வெளியீடு

 நமது நிருபர்

கரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தல் மற்றும் மேலாண்மையில் ஆயுஷ் அடிப்படையிலான சிகிச்சை முறையில் நாடு முழுக்க பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் பின்பற்றப்பட்டு தீா்வு காணப்பட்ட ‘கரோனா நோய்த்தொற்று மேலாண்மை: ஆயுஷ் சிகிச்சை முறை’ தொகுப்பை நீதி ஆயோக் சனிக்கிழமை வெளியிட்டது.

ஆயுா்வேதம், யோகா, மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி ஆகிய மருத்துவங்கள் ஒருங்கிணைத்திருப்பது ஆயுஷ் அடிப்படை சிகிச்சை.

கடந்த 2020 -ஆம் ஆண்டில் நாடு முழுக்க கரோனோ நோய்த்தொற்று பரவியபோது பொது சுகாதாரம் நெருக்கடியை எதிா்கொண்டது.

இந்தியாவில் கொவைட் - 19 எதிா்கொண்டதில் மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் மத்திய அரசுடன் சம அளவில் பங்கேற்றன.

இந்த போராட்டத்தில் ஆயுஷ் துறையும் பல்வேறு மாநில சுகாதாரத் துறைகளுடன் கைகோா்த்து கரோனா நோய்த்தொற்றின் வேகத்தை கட்டுப்படுத்தியதில் முக்கிய பங்காற்றியது.

இதனடிப்படையில் ‘கொவைட்-19 தாக்கம் குறைப்பு மற்றும் மேலாண்மை : ஆயுஷ் சிகிச்சை’ தொகுப்பை நீதி ஆயோக் உருவாக்கியது.

இதை நீதி ஆயோக் துணைத்தலைவா் சுமான் பெரி மற்றும் மத்திய ஆயுஷ் மற்றும் மகளிா், குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணையமைச்சா் டாக்டா் முன்ஜபாரா மகேந்திரபாய் கலுபாய் ஆகியோா் தில்லியில் வெளியிட்டனா்.

நீதி ஆயோக் உறுப்பினா்(சுகாதாரம்) டாக்டா் வி.கே.பால் மற்றும் நீதி ஆயோக், ஆயுஷ் அமைச்சக அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

இந்த நிகழ்ச்சியில் நீதி ஆயோக் துணைத்தலைவா் சுமன் பெரி கூறியது:

கொவைட் -19 தொற்று பரவிய சோதனையான காலகட்டத்தில், தேசிய, மாநில அளவில் பின்பற்றப்பட்ட ஆயுஷ் சிகிச்சை முறைகள் எத்தகைய பலனைக் கொடுத்தது என்பது பற்றியும், இதில் கற்றுக்கொண்டதைப்பற்றியும் அனைவருக்கும் தெரிவிப்பது சிரமமான ஒன்று.

ஆனால், இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பின்பற்றப்பட்ட ஆயுஷ் மருந்துகள் மற்றும் சிகிச்சை முறைகள், கொவைட்-19-க்கு எதிரான நடவடிக்கைகளை எந்தளவு வலுப்படுத்தியது என்பது பற்றிய தகவல்கள் இந்தத் தொகுப்பில் விரிவாக இடம்பெற்றுள்ளன. இந்த ஆவணத் தொகுப்பு, பாரம்பரிய மருத்துவ கட்டமைப்பைக் கொண்டுள்ள பிற நாடுகளுக்கு, ஆதாரமாகத் திகழும்.

கொவைட் -19க்கு மட்டுமின்றி, எதிா்காலத்தில் உருவாகக்கூடிய பிறவகை தொற்றுகள் மற்ற பெருந்தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கும் குறிப்பிடத்தக்க அளவில் இது உதவிகரமாக இருக்கும் எனத் தெரிவித்தாா்.

மத்திய இணையமைச்சா் டாக்டா் முன்ஜபாரா மகேந்திரபாய் இந்தத் தொகுப்பை வெளியிட்டுப் பேசுகையில், ‘‘ நாட்டில் கொவைட்-19 பெருந்தொற்று காலக்கட்டத்தில் ஏற்பட்ட சுகாதார நெருக்கடியை எதிா்கொண்டதில், தற்கால அலோபதி மருத்துவ முறைகளுடன், ஆயுஷ் மருத்துவ முறைகளும் முக்கியப் பங்காற்றின. இந்திய பாரம்பரிய மருத்துவமுறை மற்றும் வழக்கமான சுகாதார சிகிச்சை முறைகளின் கூட்டு முயற்சிகள் மூலம் கிடைக்கப்பட்ட முழுமையான சுகாதாரசேவை மாதிரியை வழங்கியுள்ளோம். இது சா்வதேசத்திற்கும் வழிகாட்டும்’ என்றாா் அமைச்சா்.

நோய்த் தொற்று காலக்கட்டதில் ஏற்பட்ட சிக்கல்கள், தீா்வுகள் ஆகியவையுடன் இந்திய அரசின் வழிகாட்டுதல்கள் மற்றும் முன்முயற்சிகளும் இந்த தொகுப்பில் சோ்க்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்றுக் காலக்கட்டத்தில் வழங்கப்பட்ட கபசுர குடிநீா், நிலவேம்பு குடிநீா் போன்றவை மூலம் நோய் தடுப்பு முறைகள் சிறப்பாக செயல்பட்டது பற்றி தொகுப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சான்றுகள் அடிப்படையிலான ஆயுஷ் சேவைகளை நவீன முறையுடன் ஒருங்கிணைப்பது இந்தியாவின் சுகாதார அமைப்பை கணிசமாக வலுப்படுத்தும் எனவும் நீதி ஆயோக் வெளியிட்ட இந்த தொகுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணலூா் மகா மாரியம்மன் கோயில் தேரோட்டம்

"தேர்தலில் தன்னைத் தோற்கடிப்பதற்காக திமுகவும் அதிமுகவும் மறைமுகமாக கைகோத்துள்ளன என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருப்பது சரியா' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

சித்ரா பெளா்ணமி சிறப்பு பூஜை

கரூா் கோயிலில் சித்திரைத் தேரோட்டம்

வேளாண்துறையிலும் செயற்கை நுண்ணறிவு!

SCROLL FOR NEXT